தேவையான பொருட்கள் :
சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 மேசைகரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
- சேப்பங்கிழங்கை கழுவி பின் 4,5 துண்டுகளாக வெட்டி தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
- பின் வேகவைத்த சேப்பங்கிழங்கை ஆற வைத்து, தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.
- ஒரு வாணெலியில் எண்ணெய்யிட்டு கடுகு தாளித்து சேப்பங்கிழங்கு, மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- வேகவைக்கும் போது உப்பு சேர்த்து உள்ளோம் எனவே பார்த்து சேர்க்கவும்.
0 கருத்துகள்