கடலை உருண்டை



தேவையான பொருட்கள் :


வறுத்த வேர்க்கடலை  -  100 கிராம்

வெல்லம்  -  1/2 கிலோ

தண்ணீர் - 1 கப்


செய்முறை :


  • ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் மற்றும் வெல்லத்ததை உடைத்து போடவும்.

  • பின் வெல்லம் கரைந்து நன்றாக கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும்.  ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாகை ஒரு சொட்டு ஊற்றி பார்த்தால் உருண்டையாக உருட்ட வரும் இது தான் பதம். 

  •  கம்பி பதம் வத்ததும்  வேர்க்கடலையில் ஊற்றி சிறிது ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். சூடு பொறுக்க அரிசி மாவை லேசாக கையில் கொட்டி பிடிக்கவும்.

  • சிறிது சூட்டுடன் பிடிக்க வேண்டும் இல்லையென்றால் உதிரியாகிவிடும்.



Note :  இதனை தினமும் சாப்பிடால் உடலுக்கு மிகவும் நல்லது.  இதில் வெல்லம் சேர்ப்பதால் அயர்ன் சத்து உள்ளது.





 

கருத்துரையிடுக

0 கருத்துகள்