தேவையான பொருட்கள் :
உளுத்தம்பருப்பு - 1 கப் (வெள்ளை (அ) கருப்பு)
அரிசி மாவு - 1 மேசைகரண்டி
பெரியவெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
மிளகு ,சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
- உளுந்தில் தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊற வைக்கவும். 1 மணி நேரத்திற்கு பின் தண்ணீரை நன்றாக வடிகட்டி அதிகம் தண்ணீர் சேர்க்காமல் நைஸாக பூக்க அரைக்கவும்.(கருப்பு உளுந்து என்றால் தோல் நீக்கி அரைக்கவும்)
- வெங்காயம், பச்சைமிளகாயை பொடி பொடியாக நறுக்கவும்.
- அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, மிளகு, சீரகம், உப்பு சேரத்து நன்றாக பிசையவும்.
- பின் ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு சூடானதும் மிதமான தீயில் வைத்து சிறு உருண்டைகளாக எடுத்து வாழை இலை (அ) பாலித்தீன் கவரில் வைத்து வட்டம் தட்டி நடுவில் சிறிய ஓட்டையிட்டு எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.(வாழை இலையில் எண்ணெய் தடவி தட்டவும் கையில் ஒட்டாமல் வரும்)
0 கருத்துகள்