தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் - 5
முருங்கக்காய் - 4
தக்காளி - 1
பெரியவெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- முருங்கக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின் முருங்கக்காய், கத்திரிக்காய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து கருவேப்பிலை தூவி இறக்கவும்.
இது ரசசாதம், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.
0 கருத்துகள்