கருணைகிழங்கு வறுவல் (மீன் வறுவல் போன்று)

தேவையான பொருட்கள் :

கருணைகிழங்கு       - 1/4 கிலோ
மிளகாய்தூள்              - 1 டீஸ்பூன்
மல்லித்தூள்                - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்                 - 1/2 டீஸ்பூன்
உப்பு                                 - தேவைக்கேற்ப
எண்ணெய்                    -    2 மேசைகரண்டி

செய்முறை :


  • கருணைகிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  • பின் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கருணைகிழங்கு, உப்பு  போட்டு அரை வேக்காட்டில் எடுத்து,    தண்ணீரை வடிகட்டி சிறிது ஆறியவுடன்.  மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு   சோ்த்து சிறிது நேரம் வைக்கவும். 

  • தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி கருணைகிழங்கை போட்டு இரண்டு புறமும் மிதமான தீயில் மீன் வறுவல் செய்வது போன்று வறுத்து எடுக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்