சர்க்கரை பொங்கல்



தேவையான பொருட்கள் :

பச்சைஅரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1/2 கப்
வெல்லம்  - 3 கப் (பொடித்தது)
உப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 4 மேசைகரண்டி

செய்முறை :


  • அரிசி , பருப்பு மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 5 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் விட்டு இறக்கவும். (அரிசியும் பருப்பும் நன்றாக வெந்து குழைவாக இருக்க வேண்டும் )
  • பின் ஒரு கடாயில் வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்தவுடன் வேகவைத்துள்ள அரிசி பருப்பு உடன் கலந்து நன்றாக கிளறவும்.
  • ஒரு வாணலியில் நெய்யிட்டு முந்திரி, திராட்சை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.  பின் ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.














கருத்துரையிடுக

0 கருத்துகள்