தேவையான பொருட்கள் :
சிக்கன் - 250 கிராம்
பூண்டு - 1
இஞ்சி - 1 துண்டு
சின்னவெங்காயம் - 10 (அ) பெரியவெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2டீஸ்பூன்
எண்ணெய் - 1 மேசைகரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க :
தேங்காய் துருவல் - 1/4கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிக்க :
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
பட்டை,இலை,கிராம்பு, கசகசா - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டவும் பெரிய வெங்காயம் என்றால் பொடி பொடியாக நறுக்கவும். தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும், இஞ்சி பூண்டு விழுது , தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
சிக்கன், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பின் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும், சிக்கன் பாதி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்த நன்றாக கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.( தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்)
0 கருத்துகள்