கேள்வரகு லட்டு

தேவையான பொருட்கள் :

கேள்வரகு மாவு  -  2 கப்

வெல்லம் பொடித்தது  -  3 கப்

வறுத்தவேர்க்கடலை  -  2 கப்

நெய்  -  1 கப்

ஏலக்காய்  -  5

செய்முறை :


  • கேள்வரகு மாவை சிவக்க வறுத்து கொள்ளவும்.  வேர்க்கடலையை லேசாக வறுத்து சூடு ஆறிய பின் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

  • கேள்வரகு மாவுடன் பொடித்த சர்க்கரை மற்றும் வேர்க்கடலை பொடியும் சேர்த்து நன்றாக கிளறவும்.

  • பின் ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் இந்த கலவையில் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். நெய்யை சிறிது சிறதாக ஊற்றவும் அதிகம் சேர்த்து விட்டால் களியாகவிடும்.  நெய் பத்தவில்லையென்றால் சூடு செய்து சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மாலை நேர ஸ்நாக்சாக கொடுக்கலாம் மிகவும் ஆரோக்கியமானது.  எளிதில் செய்ய கூடயது.

















 

கருத்துரையிடுக

0 கருத்துகள்