சுழியன்

தீபாவளி என்றாலே!   எல்லோர் வீட்டிலும் மறக்காமல் கண்டிப்பாக செய்து விடுவார்கள் இந்த சுழியனை. மிகவும் பாரம்பரியமாக செய்துவரும் இந்த இனிப்பு வகை, சுவையானதும், சத்தானதும் கூட!





தேவையான பொருட்கள் :



கடலைபருப்பு - 1 கப்

வெல்லம் பொடித்தது - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

உப்பு - 1 சிறிதளவு

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

மேல்மாவு செய்ய :

மைதா - 1/2 கப்

அரிசி மாவு - 1 மேசைகரண்டி(புளிக்காத இட்லி மாவு )


செய்முறை :



  • குக்கரில் கடலைப்பருப்பை சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும். கடலைப்பருப்பு குழைந்து விடகூடாது மெத்மெத்தென்று இறுக்கவேண்டும்.

  • பின் தண்ணீரை வடிகட்டி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்பொடி சேர்த்து கலக்கவும்.(தேங்காய் துருவலை லேசாக வறுத்து போட்டால் வாசணையாக இருக்கும்.)

  • இந்த பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மைதா, அரிசி மாவு (அ) இட்லி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பூரண உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து மைதா கலவையில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.









 

கருத்துரையிடுக

0 கருத்துகள்