தேவையான பொருட்கள் :
மனத்தக்காளி வத்தல் - 2 tablespoon
கொத்தவரங்காய் வத்தல் - 7
பூண்டு - 1
மிளகாய்தூள் - 1 tablespoon
மல்லித்தூள் - 2 tablespoon
மஞ்சள்தூள் - 1 teaspoon
புளி - எழுமிச்சையளவு
மிளகு - 2 teaspoon
சீரகம் - 1 teaspoon
தேங்காய் - 2 பத்தை
எண்ணெய் - 3 tablespoon
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
- புளியை சிறிது தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும் பின் மிளகு, சீரகம் இரண்டு பூண்டு பல் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
- பூண்டு தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு பூண்டு, வத்தல் சோ்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் புளி கரைசல், மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சோ்த்து கொதிவத்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு சிறிது எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
Note : தேங்காய் இல்லாமலும் செய்யலாம் ஆனால் தேங்காய் சோ்த்து செய்தால் சுவையாக இருக்கும்.மிளகு, சீரகம் அரைத்து போடுவதற்கு பதில் பொடியாகவும் சோ்க்கலாம்.
0 கருத்துகள்