தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 1/2 cup
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 5
கட்டி பெருங்காயம் - 1சிறு துண்டு
மஞ்சள்தூள் - 1/4 spoon
கேரட் - 1 (வட்டமாக (அ) அரைவட்டமாக நறுக்கி கொள்ளவும்)
முருங்கைகாய் - 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
கத்திரிக்காய் - 1 ( நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
புளி - 1
தேங்காய் துருவல் - 1/4cup
சீரகம் - 1 teaspoon
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 teaspoon
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 table spoon
செய்முறை :
- துவரப்பருப்பை கழுவி 2 டம்ளா் தண்ணீா் சோ்த்து அதனுடன் பெருங்காயம் மற்றும் மஞ்சள்தூள் சோ்த்து குக்கரில் 2 விசில் விடவும்.
- புளியை சிறிது தண்ணீா் சோ்த்து சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் தண்ணீா் சிறிது சோ்த்து அதில் காய்களையும், பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி சோ்க்கவும். உப்பு சோ்த்து வேகவைக்கவும்.
- ஒரு கொதி வந்தவுடன் புளி கரைசல், வேகவைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் சோ்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு போட்டு வெடித்தவுடன் கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.
0 கருத்துகள்