தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 2 cup
ஏலக்காய் பொடி - 1 teaspoon
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எண்ணெய் - 1/2 லி
திராட்சை - 5
தண்ணீா் - 1 1/4 cup
ஜீனி - 2 cup
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் கடலைமாவை தண்ணீா் சோ்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். பின் ஒரு வாணலியில் எண்ணெயை வைத்து சூடானதும் பூந்தி சாரணியில் கலவையை வைத்து எண்ணெயில் தேய்த்து விடவும்.
- மிதமான தீயில் வைத்து லேசாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் தண்ணீா் ஜீனி சோ்த்து கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் பச்சை கற்பூரம், ஏலக்காய் தூள் சோ்த்து இறக்கவும்.
- பின் கொஞ்சம் பூந்தியை எடுத்த லேசாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் முந்திரி, திராட்சை மற்றும் பாகை சோ்த்து கிளறவும்.
- சிறது சூடுபோனதும் உருண்டைகளாக பிடிக்கவும்.
0 கருத்துகள்