மைசூர் பாகு




தேவையான பொருட்கள் :


கடலைமாவு  -  1 cup
ஜீனி  -  3 cup
நெய்  -  2 cup
தண்ணீா்  - 3/4 cup
பேக்கிங் சோடா  -  1 சிட்டிகை


செய்முறை :

  1. கடலைமாவை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீா், ஜீனி சோ்த்து மிதமான தீயில் ஜீனி கரையும் வரை கொதிக்க விடவும்.
  3. பின் கடலைமாவை சிறிது சிறிதாக சோ்த்து கட்டி தட்டாமல் கிளரவும்.  இதனுடன் நெய்யும் சிறிது சிறிதாக சோ்த்து நன்றாக கிளரவும்.
  4. கடாயில் ஒட்டாமல் வரும் போது ஒரு தட்டில்நெய் தடவி அதில் கொட்டி பரவலாக செய்து பின் ஒரு கத்தியால் துண்டுகளாக வெட்டவும். ஆரிவிட்டால் வெட்ட முடியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்