தேங்காய் சட்னி

வழங்கியவா் : ThamilselviVenkatesan

தேவையான பொருட்கள் :

தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 4
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு - சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்

சின்னவெங்காயம் - 4
உளுந்தப்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1  டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறதளவு

செய்முறை :

  • முதலில் தேங்காயை துருவி கொள்ளவும்.  துருவிய தேங்காயுடன் பச்சைமிளகாய், இஞ்சி, பொட்டு கடலை மற்றும் உப்பு தேவைக்கேற்ப சோ்த்து சிறிது தண்ணீா் விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • சின்னவெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் கடுகு, உளுத்தப்பருப்பு, வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சோ்த்து தாளித்து இறக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்