வெல்ல அதிரசம்

வழங்கியவா் : ThamilselviVenkatesan





தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 படி
வெல்லம் - 1/2கி
ஏலக்காய் - 4
எண்ணெய் - 1/2லி

செய்முறை :

  • பச்சரிசியை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து கலைந்து தண்ணீர் சிறிதும் இல்லாமல் வடிகட்டி விடவும்.
  • பின் மிக்ஸியில் அல்லது மிசினில் கொடுத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு குழியான கடாயில் தண்ணீா் , வெல்லம் சோ்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீா் விட்டு அதில் இந்த பாகுவை விட்டு பார்த்தால் உருண்டு வரும் இது தான் பதம்.
  • இப்பொழுது பாகினை இறக்கி அதில் மாவை சிறது சிறதாக சோ்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.ஏலக்காய் பொடி செய்து சோ்க்கவும்.
  •  பின் வாழையிலை அல்லது பாலீத்தீன் பேப்பரில் எண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் போடவும். 
  • ஒரு நாள் ஊற வைத்து தட்டினால் நன்றாக வரும் அல்லது உடனேவும் எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். எடுக்கும் போது இரண்டு சல்லி கரண்டியால் அழுத்தி பிழிந்து எடுக்கவும்.
சுவையான வெல்ல அதிரசம் ரெடி.  இதனை 10 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்