ரவை கேசரி

வழங்கியவா் : ThamilselviVenkatesan



தேவையான பொருட்கள் :
ரவா - 1 கப்
சா்க்கரை - 1 கப்
கேசரி கலர் - 2 பின்ச்
வனஸ்பதி - 2 மேசைகரண்டி
நெய் - 2 மேசைகரண்டி
தண்ணீா் - 3 கப்
முத்திரி -8
திராட்சை-10
ஏலக்காய் - 2

செய்முறை :
  • ஒரு கடாயில் ரவாவை சிறது வனஸ்பதி சோ்த்து லேசாக வறுத்து கொள்ளவும். பின் தண்ணீரை குழியான காடயில் விட்டு கொதிக்க விடவும்.
  • தண்ணீா் கொதிக்கும் போது ரவாவை சிறிது, சிறிதாக சோ்த்து கட்டி பிடிக்காமல் கலக்கவும்.
  • ரவை வெந்த பின், அதனுடன் சா்க்கரையும், கேசரி பவுடரையும் சோ்த்து நன்றாக கிளறவும்.
  • மற்றொரு கடாயில் நெய் விட்டு முத்திரி, திராட்சையை வறுத்து போடவும். ஏலக்காயை பொடி செய்து போடவும். மீதமுள்ள வணஸ்பதியை சோ்த்து இறக்கவும்.
சூடான, சுவையான கேசரி ரெடி. இதனை 5 நிமிடத்தில் செய்து அணைவரையும் அசத்தலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்